தீப்பற்றிய கப்பல் தொடர்பில் வௌியாகியுள்ள சர்ச்சைக்குறிய தகவல்

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் (X-Press Pearl) கப்பலில் தீ பரவுவதற்கு 10 நாட்களுக்கு முன்னரே அதில் ஏற்றப்பட்டிருந்த கொள்கலன் ஒன்றிலிருந்து நைட்ரிக் அமிலம் கசிவதை கப்பலின் கெப்டன் உள்ளிட்ட பணியாளர்கள் அறிந்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமா அதிபர் சார்பாக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன், கொழும்பு மேலதிக நீதவான் சலனி பெரேரா முன்னிலையில் இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

கப்பலின் கெப்டன் இந்த அமில கசிவு தொடர்பாக கப்பலுக்கு உரிமையுடைய வெளிநாட்டு நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியாக செயற்படும் நிறுவனத்திற்கு அறிவித்திருந்ததாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கப்பலின் கெப்டன் அனுப்பிய மின்னஞ்சலை கப்பலின் இலங்கை பிரதிநிதி அழித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கப்பல் தீப்பற்றி எரிவதற்கு 10 நாட்களுக்கு முன்பே நைட்ரிக் அமில கசிவு ஏற்படத் தொடங்கியுள்ளதாக தெரியவருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *