எரிந்த கப்பல் இனி இலங்கைக்கு சொந்தம் – யாரும் உரிமை கோர முடியாது

தீ பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தற்போது முழுமையாக இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமாகியுள்ளதென பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதனால் கப்பலுக்கு வேறு யாரும் உரிமை கோர முடியாது என அவர் கூறினார்.

கப்பல் விபத்தில் ஏற்பட்ட நட்டம் தொடர்பில் கணிப்பீடு செய்யப்படுவதாகவும் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு பாரிய அளவு நட்டஈடு கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.

கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த உதவிய இந்தியா உள்ளிட்ட ஏனைய தரப்பினருக்கான கொடுப்பனவு இலங்கை துறைமுக அதிகார சபையால் செலுத்தப்படும் என எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டார்.

எரிந்து விபத்துக்கு உள்ளான கப்பல் தற்போது கடலில் மூழ்கிக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.