உதய கம்மன்பில மக்களுக்கு கூறிய உண்மை

எரிபொருள் கொள்வனவு செய்ய பணம் இல்லை எனவும் அதனால் நாட்டு மக்கள் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

முடிந்தளவு தனிப்பட்ட வாகன பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள் சேமித்து வைக்க தேவையாக களஞ்சியம் இருப்பதாகவும் ஆனால் இன்றைய நாளுக்கு தேவையான எரிபொருள் கொள்வனவு செய்யவும் அமைச்சிலும் நிதி அமைச்சிலும் பணம் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் வாங்குவதற்குத் தேவையான டொலர் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.

தற்போது கொள்வனவு செய்யும் எரிபொருட்களுக்கு 6 அல்லது 8 மாதங்களுக்கு பிறகே பணம் செலுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மக்களுக்கு உண்மையை தௌிவுபடுத்த வேண்டும் என்றும், அதனாலேயே இந்த உண்மைய கூறுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

உண்மையில் நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பதை மக்களுக்கு தௌிவுபடுத்தாமல் பிரச்சினைகளை தீர்க்க முடியாதென்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *