பெற்றோல் விலை அதிகரிப்பு – புதிய விலை விபரம் இதோ!

எரிபொருள் விலை ஏற்றம் செய்யப்பட வேண்டும் என வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை துணைக்குழு தீர்மானித்துள்ளது.

இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று (11) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஒக்டேன் 92 ரக பெற்றோல் 20 ரூபா அதிகரிக்கப்பட்டு 137 ரூபாவில் இருந்து157 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 பெற்றோல் 23 ரூபா அதிகரிக்கப்பட்டு 161 ரூபாவில் இருந்து 184 ரூபாவாகவும், அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒட்டோ டீசல் 07 ரூபா அதிகரிக்கப்பட்டு புதிய விலை 111 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 12 ரூபா அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 144 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், மண்ணென்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 07 ரூபா அதிகரிக்கப்பட்டு 77 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *