சஜித்துடன் சென்ற 16 பேர் ரணிலுடன் சேர்ந்தனர்

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஐக்கிய மக்கள் சக்திக்குச் சென்ற, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் 16 பேர், மீண்டும் ஐ.தே.கவில் இணைந்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

கம்பஹா நகரசபையின் 10 உறுப்பினர்களும், கண்டி மாநகர சபையின் மூன்று உறுப்பினர்களும் உடபலாத்த பிரதேச சபையின் மூன்று உறுப்பினர்களுமே இவ்வாறு மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த கம்பளை நகரசபையின் உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் ஐ.தே.கவில் இணைந்துள்ளனர்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, மேற்குறித்த உறுப்பினர்கள் அனைவரும் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் ரங்கே பண்டார கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *