ஐரோப்பாவின் நடவடிக்கையால் கவலையடைந்துள்ள இலங்கை

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் கடந்த 10ஆம் திகதி இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு தமது வருத்தத்தைத் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளிவிவகார அமைச்சினால் ஊடக அறிக்கை ஒன்று வெளியாக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்பு சட்டமானது சிறுபான்மை மக்களைத் துன்புறுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றின் தீர்மானத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும் இதனை நிராகரித்துள்ள அரசாங்கம் நாட்டு மக்கள் மீது கொடூரமான முறையில் நடத்தப்பட்ட பயங்கரவாத செயல்களுக்கு எதிரான நடவடிக்கையே இந்தச் சட்டத்தின் ஊடாக எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

2019 ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் சில ஐரோப்பிய பிரஜைகள் உட்படக் கணிசமான உயிரிழப்புகள் ஏற்பட்டமையை நினைவு கூர்வதாக வெளிவிவகார அமைச்சு தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இலங்கை அரசாங்கம் சிறந்த நல்லுறவு உரையாடலை மேற்கொள்வதனை அடிக்கோடிட்டு காட்டுவது முக்கியமானதெனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *