ஒரே நாளில் 208 பில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட்டுள்ளது?

நாட்டின் வரலாற்றில் நேற்று ஒரே நாளில் ரூ.208 பில்லியன் ரூபா பணம் புதிதாக அச்சிடப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் கூறியுள்ளார்.

பியகம தொழிற்சாலைகளில் உள்ளாடையை தைத்து வெளியிடுவது போன்று அரசாங்கம் பணத்தை வெளியிடுகின்றதாக அவர் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் இதனைக் கூறினார். அவர் மேலும் கூறியதாவது,

இந்த அரசாங்கத்தால் பிரச்சினைகளை நிர்வகிக்க முடியாது. தேங்காய்களை விநியோகிப்பது போல பணம் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இவற்றுக்கான பிரதிபலன் விளைவுகளை எதிர்காலத்தில் மக்கள் அனுபவிக்க வேண்டி வரும்.

வியத்மக அமைச்சர் நாலக கொடஹேவா சமீபத்தில் மாதிவெலவில் ஒரு பறவை பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார். அதன் செலவு 1.5 மில்லியன் ரூபாய்.

நாட்டில் மக்களுக்கு உண்ண உணவில்லை. விவசாயிகளுக்கு பசளைகள் இல்லை. வியத்மக முட்டி அமைச்சர்கள் பறவைகள் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுகிறார். இது காலத்தின் தோவையா? மக்களின் பக்கம் நின்று செயற்படுங்கள்.

பசில் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்திற்கு வருவது ஒரு நகைச்சுவையானது. அவர் அமைச்சராகி நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பார் என்ற மாயையை அரசாங்கம் போலியாக விதைத்து வருகிறது.

நாட்டைக் கட்டியொழுப்ப கோட்டபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குமாறு கேட்டானர், அதையும் மக்கள் கொடுத்தனர். மூன்றில் இரண்டு பெருன்பான்மை வேண்டும் என்றனர், அதையும் கொடுத்தனர்.

இது போதாது என்று 20 ஆவது திருத்தத்தை மேற்கொண்டனர். இறுதியில் நாட்டை மிக மேசனான நிலைக்கு தள்ளியுள்ளனர். தற்போது பசிலைக் கொண்டு வர முயற்சிக்கின்றனர்.

அவரைக் கொண்டு வந்து பிரச்சிணைகளை தீர்க்கப் போகிறார்களாம் .ஒரு ராஜபக்ஷ தோல்வியடைந்த பிறகு, இப்போது மற்றொரு ராஜபக்ஷ பேபியைக் கொண்டு வர முற்படுகின்றனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *