கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

கட்சித் தலைவர்கள் இன்று நடத்திய கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் படி பாராளுமன்றத்தை கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற அமர்வை நாளையதினம் (08) நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா இதனை எமது செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.

அதனடிப்படையில் காலை 10 மணி முதல் 4.30 மணி வரையில் இவ்வாறு பாராளுமன்ற அமர்வை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை பாராளுமன்ற வளாகத்தில் இந்த கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *