கருவில் இருந்த சிசு கொரோனா தொற்றால் மரணம் – இலங்கையில் சோக சம்பவம்

கர்ப்பிணிப் பெண் ஒருவரது கருவிலேயே உயிரிழந்த 09 மாத சிசுவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகிய சம்பவம் இலங்கையில் நடந்துள்ளது.

காலி – மஹமோதர வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 09 மாத கர்ப்பிணிப் பெண்ணின் கருவில் இருந்த சிசு திடீரென உயிரிழந்துள்ளது.

ஏற்கனவே தாய்க்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு பின் பூரண குணடைந்ததன் பின்னர் வீடு திரும்பியிருந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருக்கின்றார்.

இதனையடுத்து மருத்துவர்கள் நடத்திய பரிசோதனையில் சிசு உயிரிழந்துவிட்டதாகவும், சிசுவுக்கும் தொற்று உறுதியாகியிருந்ததையும் தெரிவித்தனர்.