கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மிதந்து வந்த சடலம்

கொழும்பு – நவகமுவ பகுதியில் களனி கங்கையில் இருந்து கைகள் கட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியின் நவகமுவ பிரதேசத்தை அண்மித்த களனி கங்கையில் மிதந்துவந்த நிலையில் சடலமொன்றை பொலிஸார் இன்று சனிக்கிழமை பகல் மீட்டுள்ளனர்.

கடந்த 23ஆம் திகதி ஹங்வெல்ல பகுதியில் வைத்து கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *