ஆள்மாறாட்டம் செய்து சந்திமாலின் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் பிரமுகர்

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்கவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட நபர்களுள் திவலப்பிட்டிய பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாகேஷ்வரி மதுஷிகா குணசேகர என்ற நபரே இவ்வாறு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆள்மாறாட்டம் செய்து சந்திமாலின் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட அரசியல் பிரமுகர்

அத்துடன், குறித்த பிரதேச சபை உறுப்பினரின் கணவரான சமல் சுசாந்த குணசேகரவும் சந்திமால் ஜயசிங்கவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் புறக்கோட்டை காவல்துறையினர் குறித்த பிரதேசசபை உறுப்பினரிடம் வினவிய போது அவர் தனது உண்மையான அடையாளத்தை மறைப்பதற்காக வேறொரு பெயரை காவல்துறைக்கு வழங்கியுள்ளார்.

இவ்வாறே அவர் தனது கணவனின் பெயருக்கு பதிலாக சமல் சுசாந்த என்ற பெயரை வழங்கியுள்ளார்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்த குற்றச்சாட்டில் அழகுக்கலை நிபுணர் சந்திமால் ஜயசிங்க மற்றும் நடிகை பியூமி ஹங்சமாலி ஆகியோர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பின்னர் நீதிமன்றில் இவர்களை முன்னிலைப்படுத்தியுள்ள நிலையில் குறித்த இருவரையும் 1 மில்லியன் ரூபா சொந்த பிணையில் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.