சந்திமாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து விசாரிக்க CCDயும் இணைந்தது

சந்திமாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்துவதற்கு கொழும்பில் உள்ள பிரபல 5 நட்சத்திர ஹோட்டல் நிர்வாகம் எவ்வாறு அனுமதி வழங்கியதென்பதுத் தொடர்பான விசாரணைகளை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி நட்சத்திர உணவகம் ஒன்றில் நடத்தப்பட்ட பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பான விஞ்ஞான ரீதியான மற்றும் தொழிநுட்ப ரீதியான விசாரணைகள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுத் தொடர்பான விசாரணைகளை கொழும்பு கோட்டை பொலிஸார் முன்னெடுத்திருந்த நிலையில், தற்போது விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் மற்றும் பயணக்கட்டுப்பாட்டு சட்டங்களை மீறி கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் அழகுக்கலை நிபுணரான சந்திமால் ஜயசிங்க பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் பங்கேற்ற நடிகை பியுமி ஹன்சமாலி உட்பட 15 பேர்வரை கைது செய்யப்பட்டு, தற்போது பதுளையிலுள்ள தனிமைப்படுத்தல் முகாமிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.