சந்திமால் ஜயசிங்கவின் பிறந்த நாள் நிகழ்வு நடத்திய ஹோட்டல் ஊழியருக்கு கொரோனா

சந்திமால் ஜயசிங்கவின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு நடத்தப்பட்ட ஹோட்டலின் சமையல்காரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர விருந்தகத்தில் சந்திமால் ஜயசிங்கவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் நடிகை பியுமி ஹன்சமாலி உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

இதேவேளை குறித்த நிகழ்வில் பங்கேற்ற மேலும் 6 பேர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் மூன்று ஆண்களும் மூன்று பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட குற்றத்திற்காக இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டு அதன்பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.