சிவபெருமானின் சர்ச்சைக்குறிய ஸ்டிகர் செய்த இன்ஸ்டகிராமுக்கு சிக்கல்

சிவபெருமானை சர்ச்சைக்குரிய வகையில் ஸ்டிக்கராக செய்ததற்காக, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் புகைப்படங்கள் பகிரும் பிரபல சமூக வலைதளமாக இன்ஸ்டாகிராம் இருந்து வருகிறது.

பேஸ்புக்கை தாய் நிறுவனமாக கொண்ட இன்ஸ்டாகிராமில், பல பிரபலங்கள் தங்கள் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் உள்ள ஸ்டிக்கர் வசதியில், சிவன் என தேடினால், சிவபெருமானின் கார்ட்டூன் ஒன்று, ஒரு கையில் மொபைல்போனும், மறுகையில் மதுபானமும் வைத்துள்ளது போன்ற ஸ்டிக்கர் ஒன்று உள்ளது.

இன்ஸ்டாகிராமில் இருக்கும் இந்த ஸ்டிக்கர், இந்துக் கடவுள் சிவனை வேண்டுமென்றே தவறாக சித்ததரித்து காட்டியுள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இதை கண்ட பலர் இன்ஸ்டாகிராம் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாக கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் மீது டில்லியில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதையடுத்து தற்போது அந்த ஸ்டிக்கர் இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *