சிவப்பு பட்டியலில் இலங்கையை இணைத்த பிரித்தானியா

சிவப்பு பட்டியல் நாடுகளுடன் இலங்கையை இணைத்த பிரித்தானியா

கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து காணப்படும் நாடுகள் தொடர்பான சிவப்பு பட்டியலில் இலங்கையின் பெயரையும், பிரித்தானியா உள்ளடக்கியுள்ளது.

ஆப்கானிஸ்தான், பஹ்ரைன், கொஸ்டாரிகா, எகிப்து, இலங்கை, சூடான் மற்றும் டிரினிடாட் – டொபாகோ ஆகிய 07 நாடுகளே இந்த பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 8ம் திகதி முதல் இலங்கையின் பெயர் இந்த பட்டியலில் உள்ளடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள எந்தவொரு நாட்டுக்கும் பிரித்தானிய பிரஜைகள் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 7 நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டிலிருந்து பிரித்தானியாவிற்கு வருகை தரும் நபர்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.