சுட்டுக் கொல்லப்பட்ட டிபர் சாரதியின் மனைவி வௌிப்படுத்திய தகவல்

தவறுதலாக சுட்டிருந்தாலும் பரவாயில்லை கையை விசுக்கி கூப்பிட்டு, வேண்டுமென்றே சுட்டு எனது கணவனை கொன்றுவிட்டனர் என, இராஜாங்க அமைச்சர் எஸ்.வி​யாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரால் சுட்டுப்படுகொலைச் செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் மனைவின் கதறியழுந்தார்.

சம்பவம் தொடர்பில் தெரிவித்த அவர்,

இரண்டொரு நாள்களுக்கு முன்னர், மண் ஏற்றிச்சென்று வீடொன்றுக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மெய்ப்பாதுகாவலர், தாங்கள் போகவேண்டும், லொறியை எடுக்குமாறு கேட்டுள்ளார்.

கொஞ்சம் இருங்கோ, மண்ணை இறக்கிவிட்டு செல்கின்றோம் என எனது கணவர் தெரிவித்துள்ளார்.

அப்போது டயரை வெட்டி போட்டுவிட்டனர். ஆனால், என் கணவன் திரும்பிவிட்டார். இறக்கிய மண்ணுக்கான காசை வாங்கதான், சென்றார். அதற்கிடையில், கையை விசுக்கி கூப்பிட்டு என் கணவனை சுட்டுக்கொன்றுவிட்டார் என கதறியழுதார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *