சைனோ பார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் பெற்றுக்கொண்டோருக்கு அறிவித்தல்

சைனோ பார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் பெற்றுக்கொண்டோருக்கு அறிவித்தல்

சைனோ பார்ம் தடுப்பூசியின் முதலாவது மாத்திரையைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு, இரண்டாவது மாத்திரையை பெற்றுக் கொள்வதற்கான இடம், நேரம் மற்றும் திகதிகளை எதிர்வரும் நாட்களில் குறுந்தகவல் மூலம் அறிவிப்பதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சீரற்ற வானிலை காரணமாக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகராட்சிக்குட்பட்ட பிரதேசங்களில் சைனோ பார்ம் தடுப்பூசியின் இரண்டாவது மாத்திரையை நாளை மறுதினம் முதல் செலுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் எமது செய்தி பிரிவிடம் தெரிவித்தார்.

நாடுமுழுவதும் நாளை மறுதினம் முதல் சைனோபாம் தடுப்பூசியின் இரண்டாவது மாத்திரை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளன.