தங்கம், வௌ்ளி வாங்க காத்திருப்போருக்கு ஒரு விஷேட செய்தி

தங்கம் விலை நிலவரம் நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்தே, பெரியளவில் ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றது. குறிப்பாக கடந்த ஆறு அமர்வுகளாகவே தொடர்ச்சியான சரிவினைக் கண்டு வருகின்றது.

நடப்பு ஆண்டு தொடக்கத்தில் தங்கம் விலை சற்று சரிவினைக் கண்ட நிலையில், இம்மாத தொடக்கத்தில் இருந்து நல்ல ஏற்றத்தினை கண்டு வந்தது.

இந்த நிலையில் தான் கடந்த வாரத்தில் மீண்டும் சரிவினைக் காணத் தொடங்கியது.

கடந்த வாரத்தில் தங்கம் விலை எப்படி இருந்தது? இனி வரும் வாரத்தில் எப்படி இருக்கும்? தற்போது வாங்கலாமா? வேண்டாமா? நிபுணர்களின் கணிப்பு என்ன? என்று பார்க்கலாம்.

தங்கம் விலை நிலவரம் எப்படி

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கம் விலையானது தொடர்ந்து சரிவினை கண்டுள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று 1879.60 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே அதிகபட்சமாக 1879.70 டாலர்களை தொட்டது.

இது தான் இந்த வாரத்தின் உச்ச விலையாகும். வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சம் 1761.20 டாலர்களை தொட்டது.

இதுவே இந்த வாரத்தின் குறைந்த விலையாகும். எனினும் முடிவில் 1764.30 டாலர்களாக முடிவுற்றது.

வரும் வாரத்திலும் நீண்ட கால நோக்கில் வாங்கலாம் என்றாலும், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் நாளைய தினம் (21) தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

வெள்ளி விலை நிலவரம் என்ன

வெள்ளி விலை நிலவரம் என்ன என்று பார்த்தால், வெள்ளியின் விலையும் கடந்த வாரத்தில் பலமான சரிவினையே கண்டது.

வாரத்தில் முதல் நாளான திங்கட்கிழமையன்று 28.095 டாலர்களாக தொடங்கிய நிலையில், அன்றே அதிகபட்சமாக 28.160 டாலர்களை தொட்டது.

இதே வெள்ளிக்கிழமையன்று குறைந்தபட்சமாக 25.770 டாலர்களை தொட்ட நிலையில், முடிவில் 25.828 டாலர்களாக முடிவுற்றது.

வெள்ளியின் விலையும் நாளை தொடக்கத்தினை பொறுத்தே இந்த வாரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் நீண்டகால நோக்கில் வாங்க நல்ல நேரமாகவே பார்க்கப்படுகிறது.

தங்கத்தின் விலை குறையுமா அதிகரிக்குமா

தங்கம் விலையானது தற்போது சரிந்திருப்பது தற்காலிகம் தான். இது எப்போது வேண்டுமானாலும் தங்கம் விலை அதிகரிக்கலாம்.

வட்டி விகிதம் தற்போதைக்கு மாறாது என்பது நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், பணவீக்கத்திற்கு இது வழிவகுக்கலாம் என்ற சந்தேகமும் நிலவி வருகின்றது.

ஆக பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆப்சனும் தங்கம் என்பதால், தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம்.

தற்போதைய தங்கம் விலை நிலவரம், குறைந்த விலையானது வாங்க நல்ல வாய்ப்பு தான் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *