தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பல் தொடர்பில் பொலிஸார் வௌியிட்ட புதிய செய்தி

தீப்பற்றிய எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பல் தொடர்பில் பொலிஸார் வௌியிட்ட புதிய செய்தி

கடற்படையினர் மற்றும் வணிக கப்பல் செயலகத்தினரால் தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தகவல்கள் உள்ளடங்கிய பகுதியை (Voyage Data Recoder) குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக குறித்த பகுதி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில தீப்பற்றிய கப்பல் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுக்கின்றது.

சம்பவம் தொடர்பாக இதுவரை 16 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

கப்பலின் பிரதான அதிகாரிகளின் வாக்குமூலங்கள் இதில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். கப்பலில் கொள்கலன்களை உள்வாங்குவதற்கு அவரே பொறுப்பாளராக செயல்பட்டுள்ளார்.

கப்பலில் ஏற்றப்பட்ட இரசாயனப் பொருட்கள் பற்றியும் விசாரணைகள் இடம்பெறுகின்றன குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களம் என்பவற்றின் அதிகாரிகள் கப்பலுக்கு சென்று இது பற்றி நேற்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.