மீண்டும் பயணத் தடை விதிக்கப்படுமா? இதோ இராணுவத் தளபதியின் விளக்கம்

நாடுமுழுவதும் பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் நாட்களில் விதிக்கப்படாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் உண்மைக்குப் புறம்பானது என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எமது செய்திப் பிரிவுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரங்களில் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் நாளாந்தம் பதிவாகும் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை மற்றும் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பயணக்கட்டுப்பாடு விதிப்பது தொடர்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.

இனிவரும் நாட்களில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட மாட்டாது என பரவும் செய்திகளில் உண்மை இல்லை என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

ஏதாவது ஒரு முறையில் தினசரி கொவிட்19 தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்தால் மீண்டும் பயணத்தடையை அமுல்படுத்த நேரிடுமென இராணுவ தளபதி எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *