நாட்டில் அமில மழை பெய்யுமா? வளிமண்டவியல் திணைக்களத்தின் அறிவிப்பு

நாட்டில் அமில மழை பெய்யுமென வளிமண்டவியல் திணைக்களம் எந்தவிமான அறிவிப்புக்களையும் வௌியிடவில்லை என மறுத்துள்ளது.

நாட்டில் அமில மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளதாக போலியானத் தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருவதாகவும், அதுபோலியானத் தகவல்கள ​எனவும் ​அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டின் சில பகுதிகளில் இன்றிரவு வேளையில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழையுடனான வானிலை நிலவக்கூடும்.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.