நீண்ட நேரம் தொலைபேசியில் பேசிய மனைவியை அடித்தே கொன்ற கணவன்

தமிழகத்தில் வசித்துவரும் ஈழ ஏதிலி ஒருவர் கொலை வழக்கு ஒன்று தொடர்பில் தேடப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம் – காந்திமா நகர் முகாமில் வசித்து வந்த அவர் தமது இரண்டாவது மனைவியைத் தாக்கி கொலை செய்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவரை தேடுவதற்காக 4 காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

அந்தக் குழுக்களில் ஒரு குழு இராமேஸ்வரம் சென்றிருப்பதாகவும், அங்குக் குறித்த ஏதிலி இலங்கைக்குத் தப்பிவிடாமல் கண்காணிப்பில் ஈடுபட்டிருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

49 வயதான குறித்த நபர், 32 வயதான தமது இரண்டாவது மனைவியைக் கடந்த திங்கட்கிழமை இரவு 10 மணி அளவில் கிரிக்கெட் துடுப்பில் தாக்கி கொலை செய்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் அதிக நேரம் தொலைப்பேசியைப் பயன்படுத்தி வந்தமை தொடர்பில் இரண்டு பேருக்கும் இடையில் முரண்பாடு தொடர்ந்து வந்துள்ளது.

இந்தநிலையில் கடந்த ஒருவாரத்துக்கு முன்னர் இதுதொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்துக் குறித்த பெண் நண்பரொருவரின் இல்லத்துக்குச் சென்று வீடு திரும்பி இருக்கவில்லை.

அவர் கடந்த திங்கட்கிழமை மீண்டும் திரும்பிய நிலையில் அவரை தாக்கி கொலை செய்த குறித்த 49 வயதான ஈழ ஏதிலி, அங்கிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *