பசில் ராஜபக்ஷவின் வருகை – எரிபொருள் விலை குறைகிறதா?

எரிபொருள் விலை குறைப்பது தொடர்பில் பசில் ராஜபக்சவிற்கு தீர்மானம் எதனையும் எடுக்க முடியாது என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சரோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர் அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் அவர் சிறந்த நிர்வாகி என்பதால் யாரேனும் எரிபொருள் விலை குறித்து அவரிடம் ஆலோசனை கேட்டால் அதற்கு அவரால் உதவி செய்ய முடியும் என பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் கொரோனா தொற்று நாட்டில் காணப்படும் நிலையில் நாட்டை மீண்டும் திறந்தால் மக்கள் தங்களுடைய பாதுகாப்பை தாங்களே உறுதி செய்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பசில் ராஜபக்ஷ நாட்டுக்கு வந்ததும் எரிபொருள் விலை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் நிமல் லான்சா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *