பசிலுக்காக தமது பதவியை இழக்கத் தயாராகும் நான்கு பேர்

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்றம் பிரவேசிப்பதற்காக தங்களது ஆசனங்களை வழங்க அந்த கட்சியின் 4 தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தயாராகவிருப்பதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், ஜயந்த கெட்டகொட, மர்ஜான் பலீல் மற்றும் பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோரே தயாராகவிருப்பதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, எதிர்வரும் 06ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற அமர்வு வாரத்தில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்து கொள்ளக்கூடும் என ஆளும் கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பசில் ராஜபக்ஷவை பாராளுமன்றிற்கு அனுப்பும் நோக்கில் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார இராஜினாமா செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு இராஜினாமா செய்யும் அவருக்கு பசில் ராஜபக்ஷ பொறுப்பேற்கவுள்ள கொள்கை வகுப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பதவி வழங்கப்படவுள்ளது. இதற்கு ரஞ்சத் பண்டார இணக்கம் வௌியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *