பந்துலவின் வர்த்தமானி தொடர்பில் இணையத்தளம்

அரிசி, சீனி, பால்மா மற்றும் சோளம் ஆகியவற்றின் கையிருப்பு தொடர்பில் உற்பத்தியாளர்களும், இறக்குமதியாளர்களும், களஞ்சியப்படுத்துவோரும், விநியோகஸ்த்தர்களும், மொத்த வர்த்தகர்களும் 7 நாட்களுக்குள் நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு அறிவிக்குமாறு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக கோரப்பட்டுள்ளது.

இதற்கமைய, இது குறித்த விபரங்களை www.caa.gov.lk என்ற இணையத்தள பக்கத்தின் ஊடாக அறிவிக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறை எதிர்வரும் 14ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *