கொவிட் மரணங்களின் திடீர் அதிகரிப்பால் பயணத்தடை நீடிக்கப்படுமா? இராணுவத் தளபதியின் விளக்கம்

யணக் கட்டுப்பாடு உத்தரவு மேலும் நீடிக்கப்படுமா என்பது குறித்து இராணுவத் தளபதி விளக்கமளித்துள்ளார்.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு அமுலாக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு தொடர்பில் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெவ்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இன்றைய தினம் 101 கொவிட் மரணங்கள் பதிவானதை அடுத்து எதிர்வரும் 14ஆம் திகதியுடன் தளர்த்தப்படவிருந்த பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

இது தொடர்பில் எமது செய்தி பிரிவு கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் வினவிய போது, பயணத் தடை உத்தரவு நீடிப்பதற்கு இதுவரையில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும் முன்னர் அறிவிக்கப்பட்டவாறே எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் பயணத்தடை தளர்த்தப்படும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை,நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு உத்தரவு எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்பட்டாலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமுலாக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணரத்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

தகவல் – ஹிரு செய்திகள்

பிந்திக் கிடைத்த புதிய செய்தியை வாசிக்க – பயணக் கட்டுப்பாடு மேலும் நீடிக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *