பயணத் தடையின் போது இயங்க அனுமதிக்கப்பட்ட துறைகள் இதோ!

பயணத் தடையின் போது அத்தியாவசிய சேவைகள் உள்ளிட்ட மேலும் சில சேவைகளுக்கு அனுமதியளிக்க தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.

அதன்படி, ஆடைத்தொழிற்சாலைகள், பாரிய கட்டுமான பணிகள், கிராமிய சந்தைகள், விவசாயம் மற்றும் சேதனப் பசளை உற்பத்தி ஆகிய பணிகளை பயணக்கட்டுப்பாட்டு காலப்பகுதியில் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சுகாதார வழிகாட்டல்களின் கீழ் இந்த துறை சார்ந்த சேவைகளை பயணத் தடையின் போது முன்னெடுக்க முடியும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேபோல், வங்கி நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களை திறக்கும் திகதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்தார்.

நாட்டின் கொவிட் நிலைமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *