சர்வதேசத்திற்கு சென்ற நடிகை பியூமி ஹன்சமாலி

பியூமி ஹன்சமாலி கலந்துகொண்ட பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வால் இலங்கையில் சுற்றாடல் பாதிப்பு பின்னுக்கு தள்ளப்பட்டது தொடர்பில் சர்வதேச ஊடகங்களிலும் செய்தி வௌியாகியுள்ளன.

இலங்கையின் சுற்று சூழலை பாதிப்பை இரண்டாம் இடத்திற்கு கொண்டு சென்ற சிங்கள நடிகை தொடர்பில் பிரபல சர்வதேச சஞ்சிகையான economist செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வாரத்தில் இலங்கையில் அதிகமாக பேசப்பட்ட தலைப்பாக நடிகை பியுமி ஹன்சமாலி காணப்படடார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடலில் மூழ்கிய தினம் 28 வயதான நடிகை பியூமி ஹன்சமாலி, அழகு கலை நிபுணர் உட்பட 13 பேர் பிறந்த நாள் விருந்து ஒன்றில் கலந்து கொண்டமையினால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவத்தையடுத்து கூகிள் தேடு பொறி உட்பட சமூக வலைத்தளங்களில் அதிகமாக தேடப்பட்ட ஒருவராக நடிகை பியுமி ஹன்சமாலி காணப்பட்டுள்ளார் என economist இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

இரண்டு வாரத்திற்கு மேலாக கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பற்றி எரிந்த எக்ஸ்பிரஸ் பெர்ல் கப்பலினால் இலங்கையின் கடற்பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் இலங்கையர்கள் உட்பட அமைப்புகள் பலவற்றின் கருத்துகளை பியுமி ஹன்சமாலியின் கைது மூடி மறைத்துள்ளதாக economist செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கப்பல் அனர்த்தம் காரணமாக கடல் வளங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீள குறைந்து 40 வருடங்கள் செல்லும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *