எரிபொருள் விலை எப்போது குறைக்கப்படும்? நாமல் ராஜபக்ஷவின் அறிவிப்பு

பெட்ரோல் விலை அதிகரிப்பு செய்யாமல் இருந்திருக்கலாமெனத் தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ஆனாலும், நாட்டின் தற்போதைய நிலைமைகளைக் கருத்திற்கொண்டு எரிபொருள்களின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

காலியில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

எதிர்காலத்தில் எரிபொருளின் விலையைக் குறைக்க சந்தர்ப்பம் கிடைக்குமாக இருந்தால், முதலாவது சந்தர்ப்பத்திலேயே எரிபொருள்களின் விலை குறைக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்களாக பெட்ரோல் விலை அதிகரிப்பு செய்யப்படவில்லை எனவும் தெரிவித்த அமைச்சர் நாமல், எரிபொருள் விலை அதிகரிக்க எடுக்கப்பட்ட தீர்மானம் விரும்பி எடுக்கப்பட்டதல்ல.

தேசியப் பாதுகாப்புக்காகவும் நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் எடுக்கப்பட்ட தீர்மானம் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, வாகனங்களைக் கொள்வனவு செய்வது தொடர்பில் சபாநாயகருடன் ஆளும், எதிர்க்கட்சியினர் கலந்துரையாட வேண்டும்.

வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு அவசியமில்லை என்றால், அது தொடர்பில் இரு கட்சிகளும் சபாநாயகருக்குக் கோரிக்கை ஒன்றை விடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *