கொழும்பில் இருந்து இடம் மாறப்போகும் பொலிஸ் தலைமையகம்

தற்போதுள்ள பொலிஸ் தலைமையகம் யோர்க் வீதியும் விகாரை வீதியும் தொடர்புபடும் வீதிக்கு இடையில் 100 வருடங்களுக்கு அதிகமான பழைய 03 கட்டிடங்களில் இயங்கி வருகின்றது

குறித்த கட்டிடத்தொகுதியில் போதியளவு இடவசதியின்மையால் சிவில் நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட மேலும் சில பிரிவுகள் வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட கட்டடங்களில் இயங்கி வருகின்றன.

பொலிஸ் தலைமையகக் கட்டிடத் தொகுதியை மிரிஹான பிரதேசத்தில் நிர்மாணிப்பதற்காக 2012 ஜுலை மாதம் 11 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தாலும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் இலங்கை பொலிஸுக்கு சொந்தமான பெப்பிலியான பகுதியில் பொலிஸ் தலைமையகத்தை நிர்மாணித்தல் மிகவும் பொருத்தமென அடையாளங்காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, பொலிஸ் தலைமையக கட்டடத்தொகுதி மிரிஹான பிரதேசத்தில் அல்லாமல், பெப்பிலியான காணியில் நிர்மாணிப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.