ஏறாவூர் சம்பவம் – இராணுவத் தளபதி எடுத்த அதிரடி நடவடிக்கை

மட்டக்களப்பு, ஏறாவூரில் பயணக் கட்டுப்பாடுகளை மீறி வீதிகளில் நடமாடியவர்களை முழந்தாளிடச் செய்த சம்பவம் தொடர்பில் இராணுவ அதிகாரி ஒருவரும், சிப்பாய் ஒருவரும் இடமாற்றப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இராணுவதளபதி சவேந்திர சில்வாவின் உத்தரவின் பேரிலேயே அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏறாவூர் மிச் நகர் பகுதியில் பயணத் தடையை மீறியமைக்காக பொதுமக்கள் சிலரை, இராணுவத்தினர் நேற்று முழந்தளிட வைத்தமை தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

இந்த செயற்பாட்டுக்கு கடுமையான கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. கொழும்புக்கு ஒரு சட்டம், கிழக்குக்கு ஒரு சட்டமா? என்றும் வினவியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை அவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என தெரிவித்துள்ள இராணுவம் விசாரணைகள் முடிவடைந்ததும் தவறிழைத்த படையினருக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *