மாவனல்லையில் மண்ணுக்குள் புதைந்த குடும்பம்

மாவனல்லை, தெவனகல பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் காணாமல் போயுள்ள ஏனைய 3 பேரை தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் தாய், தந்தை மற்றும் சகோதரன் ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மண்சரிவுக்குள் சிக்கி காணாமல்போயுள்ள ஏனையோரை தேடும் பணிகளை மீட்புக் குழுவினர் தீவிரமாக முன்னெடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் கேகாலையின் அல்கம பிரதேசத்தில் அதிகளவாக 197.5 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.