மதுபான சாலைகளை மீண்டும் திறப்பது பற்றி வௌியான அறிவிப்பு

மதுக்கடைகள் எப்போது திறக்கப்படும் என்பது தொடர்பான அறிவிப்பை கலால் திணைக்களம் வௌியிட்டுள்ளது.

நாளை (21) காலை 4 மணிமுதல் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன.

பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர், நாடளாவிய ரீதியிலுள்ள சகல மதுபானசாலைகளும் திறக்கப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

சுகாதார நடைமுறைகளைப் பேணி அனைத்து மதுபான சாலைகளையும் திறப்பதற்கு மதுவரித் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது முத்திரையிடப்பட்டுள்ள மதுபான சாலைகளுக்கு மீண்டும் அனுமதி வழங்குவது தொடர்பில் தீர்மானிக்க அனைத்து கலால் அத்தியட்சகர்கள் மற்றும் கலால் உதவி ஆணையாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *