மாவனல்லையில் நான்கு பேரை காணவில்லை – மண் சரிவு எச்சரிக்கை விடுகக்ப்பட்டுள்ள பிரதேசங்கள்

மாவனல்லை, தெவணகலை பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.

மண்சரிவில் வீடு ஒன்று மண்ணில் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நான்கு பேரையும் மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

இதேவேளை நாட்டில் தொடர்ந்து நிலவிவரும் அசாதாரண சூழ்நிலைகளையடுத்து சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.