மண்ணுக்கு புதையுண்ட ஒரே குடும்பத்தின் நால்வரின் சடலமும் மீட்பு

மாவனல்லை, தெவனகல பகுதியில் மண்சரிவில் சிக்குண்டு காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று காலை இந்த பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் தாய் தந்தை மற்றும் அவர்களது 23 வயதான மகள், 29 வயதான மகன் என நான்கு பேர் காணாமல் போயிருந்தனர்.

இதனையடுத்து மீட்பு குழாமினர் மேற்கொண்ட நடவடிக்கைகளை அடுத்து 23 வயதான மகள் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டார்.

அதனையடுத்து, தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகல் மண் சரிவில் சிக்குண்ட தாய் மற்றும் தந்தையின் சடலங்கள் மீட்கப்பட்டன.

இந்நிலையில் இறுதியாக 29 வயதான மகனின் சடலமும் மீட்கப்பட்டதாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்