மீனவர்களுக்கு வௌியான விஷேட அறிவித்தல்

பாணந்துறையில் இருந்து கொழும்பு ஊடாக நீர்கொழும்பு கொச்சிக்கடை வரையான கடல் பிரதேசங்களில் மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்துக்கு உள்ளான MV X-PRESS PEARL கப்பல் கடலில் மூழ்கியதன் காரணமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீள் அறிவித்தல் வரை கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என கடற்தொழில் திணைக்களம் மீனவர்களை கோரியுள்ளது.

நீர்கொழும்பு களப்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இந்த கப்பல் மூழ்குவதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.