முட்டை விலையில் ஏற்படப் போகும் மாற்றம்?

முட்டை விலை உயர்வு ஏற்படும் அபாயம் உள்ளது மற்றும் கோழி முட்டை விவசாயத் தொழிலில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என அனைத்திலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது .

சங்கத்தின் பொருளாளர் விஜய அல்விஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

கோழி முட்டை உற்பத்தியைத் தொடர இயலாமை காரணமாக, எதிர்காலத்தில் முட்டை விலை உயர்வு ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.

நாட்டின் கோவிட் தொற்று காரணமாக முட்டை உற்பத்தியாளர்கள், அத்தியாவசிய பொருட்களின் அதிகரித்துவரும் செலவைத் தாங்க முடியாதுள்ளனர். தற்போதுள்ள கையிருப்புகளைச் சந்தைப்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

எனவே முட்டை உற்பத்தி தொழிலை மூட வேண்டிய நிலை ஏற்படலாம். எரிபொருள் விலை உயர்வின் விளைவாகப் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளன. இது முட்டை உற்பத்தியின் சந்தைப்படுத்தலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

முன்னதாக, தம்மிடம் அதிகமான முட்டைகள் இருந்தன. விற்பனையகங்கள் செயற்பட்டதால், நாட்டின் கேள்விக்கு ஏற்ப முட்டைகளுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இருக்கவில்லை.

இருப்பினும், தற்போது முட்டை விநியோக வலையமைப்பின் மந்தநிலை காரணமாகவும், சில்லறை விற்பனையகங்கள் மூடப்பட்டுள்ளமையாலும், தற்போதுள்ள கையிருப்பு போதுமானதாக தெரிகிறது.

நல்ல நிலையில் இருக்கும் முட்டைகளை அழுகாமல் குறைந்தது 21 நாட்களுக்குச் சேமிக்க முடியும்.

எனவே, அந்த குறிப்பிட்ட காலத்திற்குள் முட்டைகளை விற்பனை செய்ய வேண்டும். பிற அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கருத்தில் கொள்ளும் போது, முட்டைகளின் விலை இன்னும் குறைவாகவே உள்ளது.

ஆனால், நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, முட்டைகளின் விலையும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று அல்விஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *