மேலும் ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்ட உதய கம்மன்பில

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவின் பெயரில் சிங்கப்பூர் வங்கியில் உள்ள கணக்கு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றே எரிபொருள் இறக்குமதி செய்வதாகவும் அதனால் நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு குறித்த நிறுவனம் முன்வைத்த கோரிக்கையும் அதற்கென அமைச்சர் கம்மன்பிலவின் சிங்கப்பூர் வங்கி கணக்கில் வைப்பிலிட்ட கொமிஷ் பணமும் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

அதனால் இந்த விடயம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மசகு எண்ணெய் மத்திய கிழக்கில் உற்பத்தி செய்யும் நிலையில் நேரடியாக அங்கிருந்த மசகு எண்ணெய் கொள்வனவு செய்யாமல் அதனை சிங்கப்பூர் நிறுவனம் ஊடாக கொள்வனவு செய்வது ஏன் என்ற கேள்வியை பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எழுப்பியுள்ளனர்.

கொரோனா கஸ்ட காலத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பு செய்யப்பட்டதால் மக்கள் மத்தியில் சென்று அரசியல் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதென மொட்டு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கன் தெரிவித்துள்ளனர்.

தகவல் – லங்கா நியூஸ் வெப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *