15 வயது சிறுமி விற்கப்பட்ட சம்பவம் – அம்பலத்துக்கு வரும் தகவல்கள்

இணையத்தின் ஊடாக விற்பனை செய்யப்பட்ட 15 வயது சிறுமியை துஷ்பிரயோகப்படுத்திய மற்றும் அதற்கு உதவிப் புரிந்த குற்றச்சாட்டில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (30) கைதானவர்களில் மிகிந்தலை பிரதேச சபை உப தலைவர் மற்றும் முன்னணி வர்த்தகர் ஒருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

35 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டமையை தொடர்ந்து, இந்த செயலுக்குப் பணம் செலுத்திய பலரைக் கைது செய்ய காவல்துறை விசாரணையை ஆரம்பித்து தற்போது வரை 21 பேர் வரை கைது செய்துள்ளனர்.

முன்னதாக, இந்த 15 வயது சிறுமியை பாலியல் வேலைக்காக ஈடுபடுத்தியதற்காகக் கொழும்பு கல்கிசையில் பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்தனர்.

இதேவேளை, நேற்று வெள்ளவத்தை பகுதியில் ஆண் மற்றும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நேற்று (30) 17 பேரும் அதற்கு முன்னர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் பிள்ளையின் தாய் மற்றும் சிறுமியை விற்பனை செய்த நபரின் இரண்டாம் மனைவி, சிறுமியை விற்பனைக்காக ஒவ்வொரு இடங்களுக்கும் கொண்டுச் சென்ற முச்சக்கர வண்டி சாரதிகள் இருவர் அத்துடன் சிறுமியை விற்க விளம்பரம் தயாரித்தவரும் மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இணையத்தின் ஊடாக பாலியல் செயற்பாடுகளுக்காக குறித்த சிறுமி ஏற்கனவே 3 மாதங்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், அதாவது 10 ஆயிரம் 15 ஆயிரம் மற்றும் 30 ஆயிரம் ரூபா பணத்துக்காக குறித்த சிறுமி விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த விபச்சார விடுதி கல்கிஸ்ஸையில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் செயல்பட்டு வந்தது. இங்கு வைத்தே 15 வயது சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *