இந்தியாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட மூன்று இலங்கையர்கள்

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள் மூவர், கேரளா, அங்கமாலி பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்புப் படையணியினால் இச்சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் போலி அடையாள அட்டைகளுடன் கேரளா, அங்கமாலி – கிடங்கூர் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் தங்கியிருந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் இடம்பெற்ற பல குற்றச்செயல்களுடன் இவர்கள் தொடர்புடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *