இலங்கையில் நான்காவது கொவிட் அலையின் முதல் பாதி?

கொரோனா நான்காவது அலையின் முதல் பாதியை இலங்கை நெருங்கியுள்ளதாக இலங்கை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.

இன்று கொழும்பில் நடத்தப்பட்ட ஊடக சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பில் 30 சதவீதமானோர் டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இந்த எண்ணிக்கை 50 சதவீதமாக அதிகரிக்கக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள போதிலும் தொற்றாளர்கள் கனிசமான அளவு இணங்காப்படுவதாக குறித்த சங்கத்தின் தலைவர், விஷேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாட்டில் உள்ள குறைபாடுகளே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

4 ஆவது அலையை நெருங்கிக் கொண்டிருப்பதை இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் உணரக்கூடியதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.