இலங்கை கிரிக்கட் அணியின் சாதனை

இலங்கை கிரிக்கெட் அணி புதுவித சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது. இங்கிலாந்து அணியுடன் இடம்பெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது.

போட்டியில் முதலில் துடுப்பொடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அணி 9 விக்கெட்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றுக்கொண்டிருந்தது.

பதிலுக்கு துடுப்பொடுத்தாடிய இங்கிலாந்து அணி 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து போட்டியில் வெற்றி பெற்றிருந்தது.

நேற்றைய போட்டி தோல்வியுடன் இலங்கை அணி புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளது.

அதனடிப்படையில் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிகளவான தோல்விகளை சந்தித்த அணியாக இலங்கை அணி பதிவாகியுள்ளது.

ஒருநாள் போட்டிகளில் அதிக தோல்விகளை சந்தித்த நாடாக இந்தியா இதுவரை விளங்கியது. அதனை இலங்கை முறியடித்துள்ளது.

1975 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானதில் இருந்து இப்போது வரை இலங்கை 860 போட்டிகளில் விளையாடியதுடன் 390 போட்டிகளில் வென்று 428 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

2015 ஆண் ஆண்டிலிருந்து இலங்கை ஆடிய 75 ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

இந்தியா 427 போட்டிகளில் தோல்வியடைந்ததே இதுவரை மோசமான சாதனையாக இருந்தது.

பாகிஸ்தான் அணி 414 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *