05ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஆணுறை – சர்ச்சையை ஏற்டுத்தியுள்ள அறிவிப்பு

உலகச் செய்திகள் தமிழில்: அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள பள்ளிகளில் 5-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு ஆணுறை வழங்கப்படும் என்று வெளியான அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சிகாகோவில் கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் அடுத்த மாதம் முதல் திறக்கப்படவுள்ளது.

பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஃபேஸ்மாஸ்க், சானிடைசர், தெர்மாமீட்டர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டு கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கையின் படி பள்ளிகளில் 5-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு ஆணுறை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிகாகோ பள்ளி கல்வித்துறை, பள்ளிகளில் 5-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஆணுறைகள் மற்றும் சானிட்டரி பேட்களை வழங்க வேண்டும் என கடந்தாண்டு புதிய கொள்கையை விதித்தது.

இது பாலியல் கல்வியின் ஒரு பகுதி எனக் கூறப்படுகிறது.

எச்.ஐ.வி தொற்று மற்றும் மாணவர்களிடையே எதிர்பாராத கர்ப்பம் உள்ளிட்டவற்றை தடுப்பதற்காகவும் பாலியல் நோய்கள் பரவுவதை தடுக்கும் விதமாகவும் சிகாகோ பொது சுகாதாரத்துறையால் ஆணுறைகள் வழங்கப்படுகின்றன.

இந்த அறிவிப்புக்கு பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களும் கடுமையாக தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்த விமர்சனங்களை முன்வைக்கும் சமூக ஆர்வலர்கள், ‘பாலியல் கல்வியை வரவேற்கிறோம் ஒன்றும் பிரச்னையில்லை.

5-வது படிக்கும் சிறுவனுக்கு ஆணுறைகள் எதற்கு என்று தான் கேட்கிறோம். 5-வது படிக்கும் சிறுவனுக்கு என்ன ஒரு 10, 11 வயது இருக்குமா.

அந்த சிறுவர்களுக்கு ஆணுறைகள் எதற்கு. இதன்மூலம் நீங்க என்ன சொல்லிக்கொடுக்க விரும்புறீங்க.

5-வது படிக்கும் சிறுவனுக்கு ஆணுறை கொடுப்பது எல்லாம் கேலிக்குரியது.’ என கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

வளரும் இளம்பருவத்தினருக்கு சரியான ஆலோசனையும் கல்வியும் தேவை எனக் கூறி இந்த அறிவிப்பை சிலர் வரவேற்க செய்கின்றனர். உலகச் செய்திகள் தமிழில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *