கடத்தப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நால்வரும் இராணுவத்தினர்

நுரைச்சோலைப் பிரதேசத்தில் நபர் ஒருவர் கடத்தப்பட்டு, இடைநடுவில் கைவிட்டுச் சென்ற சம்பவம் தொடர்பில், இராணுவ கப்டன் ஒருவர் உள்ளிட்ட 4 இராணுவ வீரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் நுரைச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என, ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடத்தல் தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து இராணுவ உடைக்கு ஒத்த உடையில் சென்று நபர் ஒருவரை கடத்தி கடுமையாக தாக்கியது இராணுவத்தினர் என்பது தெரிய வந்தது.

கைதுசெய்யப்பட்ட இராணுவ வீர்ர்கள் நால்வரும் கல்லாறு இராணுவ முகாமுக்கு இணைவாக கடமையாற்றுபவர்கள் என்றும், இவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்கள் புத்தளம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *