குர்பான் கொடுப்பதற்கு கொழும்பு மாநகர சபை அனுமதி

குர்பான் கொடுப்பதில் சிக்கல்கள் நீடித்த நிலையில், குர்பான் கொடுப்பதற்கு கொழும்பு மாநகர சபையின் அனுமதி கிடைத்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் எம்.டி எம் இக்பால் தெரிவித்தார்.

கொழம்பு மேயர் ரோஸி சேனாநாயக்க தலைமையில் நடைபெற்ற மாதாந்த மாநகர சபைக் கூட்டத்தில் குர்பானுக்காக மாடுகளை அறுப்பதற்கு அனுமதி வழங்கும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக பிரதிமேயர் எம்.ரி.எம் இக்பால் தெரிவித்தார்.

இதன்படி இன்று முதல் குர்பான் கொடுப்பவதற்கான அனுமதியை இரவு 7 மணி வரையும் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

பொதுவாக மாலை 5 மணி வரையுமே அனுமதி பெறுவதற்கான நேரம் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், இன்று இரவு 7 மணி வரை இந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாளையும் வழமைபோல (5 மணி வரை) அனுமதி பெற முடியும் என்றும் அந்த உறுப்பினர் மேலும் குறிப்பிட்டார்.