சிறிய ரக வாகனங்களை செலுத்துவோருக்கு பொலிஸாரின் விஷேட அறிவிப்பு

வீதி விபத்துகளில் சிக்கி 9 பேர் நேற்று (14) ஏற்பட்ட உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். மோட்டார் சைக்கிளில் பயணித்த 7 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், ஏனைய இருவரும் முச்சக்கரவண்டிகளில் பயணித்தவர்கள் என அவர் கூறினார்.

தற்போது, மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்களும், பாதசாரிகளும் விபத்துக்களுக்கு உள்ளாகின்றமை அதிகரிப்பதால், அவதானத்துடன் செயற்படுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

சிறிய வாகனங்களில் பயணம் செய்வோர் அதிகளவில் விபத்துக்கு உள்ளாவதை அவதானிக்க முடிவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஆகவே சிறிய ரக வாகனங்களை செலுத்துவோர் அதிக அவதானத்துடன் வீதிகளில் வாகனத்தை செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதேநேரம் வாகன சாரதிகளின் தவறுகளுக்கான தண்டப் பணத்தை இலத்திரனியல் முறையில் செலுத்துதல் மற்றும் சாரதிகளுக்கு புள்ளி வழங்கும் திட்டம் ஆகியன விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *