கொரோனா தொற்றிய சிறுவர்களுக்கு ஏற்படும் ஆபத்தான புதிய நோய்

கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த சிறுவர்களுக்கு, மற்றுமொரு நோய் பரவி வருவதாக பொரள்ளை லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

இந்த நோய்க்கு உள்ளானதாக சந்தேகிக்கும் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக விஷேட வைத்தியர் நளின் கிதுல்வத்த தெரிவித்துள்ளார்.

இந்த புதிய வகை நோய் தொற்றுக்குள்ளான 34 சிறுவர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அவர்களுள் 21 குழந்தைகள் கொழும்பு ரிஜ்வோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 2 முதல் 6 வாரத்திற்குள் இந்த நோய் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

காலி – கராபிட்டி மருத்துவமனையில் ஆறு குழந்தைகளும், கண்டி மருத்துவமனையில் நான்கு குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளதாக அவர் கூறினார்.

யாழ்ப்பாணம், தியதலாவ, குருநாகல் மற்றும் பதுளையில் உள்ள மருத்துவமனைகளில் இருந்தும் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நோய் கொரோனாவுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், தொற்று ஏற்பட்ட இரண்டு முதல் ஆறு வாரங்களுக்கு இடையில் இது ஏற்படக்கூடும் என்றும் அவர் கூறினார்.

இந்த நோய் உலகில் ஒரு புதிய நோய் என்று நலின் கித்துல்வத்த குறிப்பிட்டுள்ளார்.

வயிற்று வலி, தோலழற்சி, வயிற்றுப்போக்கு மற்றும் கண்கள் சிவத்தல் ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். மேலும் இந்த நோய் குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருப்பது முக்கியம், என்றார்

இந்த நோய் தொற்று குறித்து, பெற்றோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என வைத்தியர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.