ரிஷாட் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை உட்பட மூவர் கைது

வீட்டில் பணியாற்றிய சிறுமியின் மரணம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் தரகர் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இதனைக் கூறியுள்ளார்.

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்து வந்த ஹட்டன், டயகம பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக நேற்று நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிற்கு சென்ற பொரளை பொலிஸை சேர்ந்த விசேட குழு ஒன்று அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ததுடன், மீண்டும் நேற்றைய தினம் மாலை ரிசாத் பதியுதீனின் மனைவி பொரள்ளை பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்டிருற்தார்.