தங்கத்தின் விலையில் ஏற்படும் மாற்றம்; இந்த வாரம் மேலும் அதிகரிக்குமா?

தங்கத்தின் விலை என்ன என்று பார்த்தால் நிபுணர்கள் சொல்வதைபோல் போகிற போக்கில் உச்சத்தினை மீண்டும் ​தொட்டு விடுமோ? இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்கும்? பழைய உச்சத்தினை உடைத்து புதிய உச்சத்தினை தொடுமா? நிபுணர்கள் சொல்வதைபோல் மீண்டும் 2,200 டாலர்கள் அல்லது அதற்கு மேல் அதிகரிக்குமோ? என்ற அச்சமும் எழுந்துள்ளது.

ஏனெனில் டாலரின் மதிப்பு வலுவடைந்து வரும் அதே நேரத்தில், புதிய வகை கொரோனா தொற்று பரவல் எண்ணிக்கையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

எனினும் சர்வதேச சந்தையில் கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை ஆனது பெரியளவில் மாற்றமில்லாமல் ஒரு rangebound ஆகவே வர்த்தகமாகிக் கொண்டு வருகிறது.

குறிப்பாக தங்கம் விலை அதிகரிக்கும் பட்சத்தில் 1800 டாலர்களையும் உடைக்கவில்லை. இதே சரியும்போது 1750 டாலர்களையும் உடைக்கவில்லை. ஆக வரும் வாரத்தில் இந்த இரு விலைகளில் ஏதேனும் ஒரு பக்கம் நிச்சயம் உடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் தங்கத்தின் விலை என்ன ஆனது என்று பார்த்தால், ஆரம்பத்தில் சற்று குறைவது போன்று தோன்றினாலும், மீண்டும் வாரத்தின் பிற்பாதியில் ஏற்றம் கண்டது.

கடந்த திங்கட்கிழமையன்று 1782 டாலர்களாக தொடங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமையன்று குறைந்தபட்ச விலையாக 1750.10 டாலர்கள் வரையில் சென்றது. இது தான் கடந்த வாரத்தின் குறைந்தபட்ச விலையாகும்.

எனினும் வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 1795.90 டாலர்களை தொட்டது. இது தான் கடந்த வாரத்தின் உச்ச விலையாகும். அன்றே முடிவில் 1787.55 டாலர்களையும் தொட்டது.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தங்கத்தின் விலை

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை கடந்த 2021-07-03 அன்று 24k தங்கம் ரூபா.113,500 வரையில் விற்பனையாகியதுடன், 22k தங்கம் ரூபா.103 500 வரையில் விற்பனையாகி இருந்தமை கூறத்தக்கது.

அதேபோல் கடந்த வௌ்ளிக்கிழமை (02) அன்றும் இதே விலையில் தான் யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இருந்துள்ளது.

ஆக இந்த வாரத்திலும் நீண்ட கால நோக்கில் வாங்கலாம் என்றாலும், மீடியம் டெர்ம் வர்த்தகர்கள் நாளை தொடக்கத்தினை பொறுத்து வாங்கலாம்.

வெள்ளி விலை நிலவரம் இன்று

தங்கம் விலையினை போலவே, வெள்ளியின் விலையும் முதல் இரண்டு நாட்கள் சரிவில் காணப்பட்டாலும், அடுத்த மூன்று நாட்கள் ஏற்றத்தினைக் கண்டது.

கடந்த திங்கட்கிழமையன்று 26.220 டாலர்களாக தொடங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமையன்று குறைந்தபட்சமாக 25.580 டாலர்கள் வரையிலும் சென்றது.

எனினும் வெள்ளிக்கிழமையன்று அதிகபட்சமாக 26.700 டாலர்களாக உச்சத்தினை தொட்டது. முடிவில் 26.600 டாலராகவும் முடிவுற்றது. வெள்ளியின் விலையும் இன்றைய தொடக்கத்தினை பொறுத்தே இந்த வாரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் 2022ல் மீண்டும் 1900 டாலர்களை தொடலாம்.

இது இந்தியா சீனா மற்றும் இந்தியாவில் பிசிகல் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் பட்சத்தில் விலைக்கு சாதகமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் தங்கம் விலையானது நடப்பு ஆண்டிலேயே 2200 டாலர்களை தொடலாம் என WELLS fargo கணித்திருந்தது நினைவுகூறத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *