நாட்டில் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் எதுவுமில்லை

உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில், நாட்டில் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டில் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல்கள் நிலவுவது குறித்து உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில் எந்த தகவலும் வரவில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்தார்.

பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள இலங்கை குறித்த புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனைக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொரோனா நிலைமை காரணமாக இலங்கை தொடர்பான அமெரிக்க பயண ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான அச்சுறுத்தலும் அதில் இயல்பாகவே சேர்க்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா இடங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், கிளப்கள், உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், முக்கிய விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகளை குறிவைத்து இலங்கையில் பயங்கரவாதிகள் தாக்கக்கூடும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *